பஞ்சாபை சேர்ந்த இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து 2021-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் நடைபெற்ற போட்டியில் 21 வயதான இவர் இந்த பட்டத்தை வென்று 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பெருமையை தேடி தந்துள்ளார்.
பொது நிர்வாகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ள ஹர்னாஸ் சாந்து, பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.. இதற்கு முன்னர் கடந்த 2000-மாவது ஆண்டில் இந்தியாவின் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டார்.