தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், தேசிய உதவி மையம் ஒன்றை மத்திய சமூக நீதி அமைச்சகம் இன்று தொடங்கவுள்ளது.
இந்த உதவி மையம் நாடு முழுவதும் 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் 24 மணி நேரமும் இயங்கும். பாகுபாடு இன்றி அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படும்.