வேளாண் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதிக்க டெல்லியில் இருந்து ஊர் திரும்பிய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கடன் தள்ளுபடி வேலை வாய்ப்புகள் , தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நான்கு ஆண்டுகளாக இந்த வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 13 மாதங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில் மாநில அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர்.