விராட்கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் 4வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்.
இந்த தினத்தை முன்னிட்டு அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா-வுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள விராட், தன்னை எல்லா வழியிலும் நிறைவு செய்வதாக கூறி அனுஷ்கா மீதான அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
குழந்தை வாமிகாவால் வாழ்க்கை முழுமையடைந்து இருப்பாதாகவும் கோலி குறிப்பிட்டுள்ளார். இதேபோல் அனுஷ்கா ஷர்மாவும் அரிய புகைபடங்களை பகிர்ந்து கோலிக்குப்பிடித்த ஆங்கில பாடல் ஒன்றை குறிப்பிட்டு அந்த பாடல் வரிகளை போல் வாழ்ந்தும் வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.