சூழல் மாசுபாட்டைக் காரணங் காட்டி இந்துஸ்தான் சிரிஞ்ச் நிறுவனத்தின் ஆலையை மூடும்படி அரியானா அரசு உத்தரவிட்ட நிலையில், விலக்களிக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பரீதாபாத்தில் உள்ள இந்துஸ்தான் சிரிஞ்ச் ஆலை நாட்டின் சிரிஞ்ச் தேவையில் 66 விழுக்காட்டை நிறைவு செய்கின்றன. மின்னுற்பத்திக்கு டீசல் ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் காற்று மாசுபடுவதாகக் கூறி இந்த ஆலை உட்பட 228 ஆலைகளை மூடும்படி அரியானா மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இதை மறுத்துள்ள அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ராஜீவ்நாத், இயற்கை எரிவாயு மூலமே மின்னுற்பத்தி செய்வதாகவும், அதற்கு மாற்றாக டீசல் ஜெனரேட்டர்கள் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.