குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் மேலும் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
சிதறிய உடல்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் சாய் தேஜா மற்றும் விவக் குமார் ஆகிய இரண்டு வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் எஞ்சிய உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர வீரர்களின் உடல்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.இதனிடையே விபத்தில் இறந்த இந்திய விமானப் படையை சேர்ந்த 4 வீரர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.