முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ஆகியோரின் உடல்களுக்கு அரசியல் தலைவர்களும், ராணுவத்தினரும், குடும்பத்தினரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
டெல்லி பாலம் விமானப்படைத் தளத்தில் இருந்து பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ஆகியோரின் உடல்கள் ராணுவ வாகனத்தில் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வீட்டில் வைக்கப்பட்ட உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இருவரின் உடல்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய மூதாட்டி ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ஹரீஷ் ராவத் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பிபின் ராவத் உடலுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
பல்வேறு நாடுகளின் ராணுவ அதிகாரிகள், பிரான்ஸ், இஸ்ரேல் நாடுகளின் தூதர்கள் மரியாதை செலுத்தினர்.
பல்சமயங்களைச் சேர்ந்தவர்களும் பிபின் ராவத் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பிபின் ராவத், மதுலிகா ஆகியோரின் உடல்களுக்கு அவர்களின் மகள்கள் கிருத்திகா, தாரிணி ஆகியோர் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர்.