உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் தெஹத் மாவட்டத்தில் கையில் குழந்தையுடன் இருக்கும் நபரை போலீசார் லத்தியால் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
குழந்தைக்கு தாய் இல்லை, அடிக்க வேண்டாம் என நபர் கதறி ஓடுவதும், நபரை விரட்டிப் பிடித்து தாக்கிய போலீசார் குழந்தையை பறிக்க முயற்சிப்பது போன்று வீடியோ வெளியானது. அக்பர்பூர் மருத்துவமனை குறித்து அவதூறு பரப்பியதாக ஊழியரிடம் விசாரித்த காவல் ஆய்வாளரை கையில் கடித்ததாகவும், பாதுகாப்பு கருதி பதில் தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட ஆய்வாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.