கடந்த சில ஆண்டுகளில் அரபிக் கடலில் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிதீவிரமான புயல் என்பது மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். மிகவும் வலுவான புயல்கள் அரபிக் கடலில் தோன்றிய போதும் இந்தியாவின் மேற்குக் கடலோர மாநிலங்களுக்கு இதனால் பெரிய அளவில் அச்சுறுத்தல் இல்லை என்றும் பெரும்பாலான புயல்கள் ஓமனிலும் ஏமனிலும்தான் கரையைக் கடந்தன என்றும் மாநிலங்களவையில் மத்திய அறிவியல்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்டலில் உருவான புயல்கள் தமிழ்நாடு,புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கரையைக் கடந்து உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவற்றை ஏற்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்