விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளித்ததையடுத்து, டெல்லி-ஹரியானா எல்லையில் சுமார் 13 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தை விவசாயிகள் திரும்பப் பெற்றனர்.
மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என்பதை விவசாயிகள் சங்கத்தினர் ஜனவரி 15 ஆம் தேதி மீண்டும் கூடி ஆய்வு செய்ய உள்ளனர். போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து நாளை முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.
போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தங்கள் சொந்த ஊர்களில் வெற்றிப் பேரணிகளை நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.