விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான், வரும் 2023 ல் செயல்படுத்தப்படும் என மாநிலங்களவையில் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மத்தியில் இது தொடர்பான குரூ எஸ்கேப் சிஸ்டம் குறித்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என்றார்.
அடுத்த ஆண்டு இறுதியில் வியோமித்ரா என்ற ரோபோவை வைத்து சோதனை நடத்திய பின், 2023ல் இஸ்ரோ விண்வெளி வீரர்கள் அதில் பயணம் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா மாறுவதாகவும் அவர் தெரிவித்தார்.