ஊதியத்தில் உள்ள குறைபாடுகளைக் களையும் படி வலியுறுத்தி கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைகளைத் திருத்த வேண்டும், ஜூனியர் மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் மருத்துவர்களுடன் செவ்வாய்க்கிழமையன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனை அடுத்து மருத்துவர்களில் ஒரு சாரார் ஒருவாரகாலமாக நீடித்த வேலைநிறுத்தத்தை நிறுத்தி விட்டு நேற்று பணிக்குத் திரும்பிய போதும் மற்றொரு சாரார் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்