உத்தரப்பிரதேசத்தில் 17 மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக பள்ளி முதல்வர் உள்பட இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முஸாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் செய்முறைத் தேர்வுகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவிகள் 17 பேரை அங்குள்ள இரவில் பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கிச்சடியை சாப்பிட்டதும் மாணவிகள் சுயநினைவை இழந்ததாகத் தெரிகிறது.
அப்போது பள்ளி முதல்வரும், அவரது உதவியாளரும் மாணவிகளிடம் அத்துமீறியதாகவும், பின்னர் மாணவிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் நடந்த இந்த நிகழ்வு குறித்து மாணவிகள் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத்ததையடுத்து இந்த விவகாரம் வெளியில் வந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.