டெல்லியில் பா.ஜ.க எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்ற அக்கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.