இந்தியா - ரஷ்யா இடையிலான நட்புறவு நிலையாகவும், வலுவாகவும் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவுடன் அவர் பேச்சு நடத்தினார். அப்போது உலகில் விரைவான புவிசார் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையிலும் இந்திய ரஷ்ய நட்புறவு தனித்தன்மையுடன் வலுவாக உள்ளதாகத் தெரிவித்தார்.
இரு நாட்டு உறவுகள், ஒத்துழைப்புகள் மனநிறைவளிக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கும் இந்திய ரஷ்ய ஆண்டுக் கூட்டத்தில் பாதுகாப்பு, வணிகம், முதலீடு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மிக முக்கியமான உடன்பாடுகள் எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளது மத்தியக் கிழக்கு ஆசியாவில் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ஜெய்சங்கர் கூறினார்.