நாகாலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
மியான்மர் எல்லைப்பகுதியில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 10 பேர் தினக்கூலிகள். பின்னர் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த உள்ளூர் மக்கள் ராணுவ முகாமுக்குத் தீ வைத்தனர். பதற்றம் நிலவும் சூழலில் முதலமைச்சர் நெய்ப்பு ரியோ டெல்லியில் இருந்து கோஹிமாவுக்கு அவசரமாக திரும்பி உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நாகாலாந்து அரசு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவத் தளபதி நரவானேயிடம் விளக்கம் அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.