கொல்கத்தாவில் திருமண விருந்தில் மீதமான உணவை மணமகனின் சகோதரி உடனடியாக எடுத்துச் சென்று ரயில் நிலையம் அருகே நடைபாதையில் உள்ள ஏழைகளுக்கு வழங்கும் படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது..
சோறு, குழம்பு, சப்பாத்தி எனப் பல வகை உணவுகளையும் இரவே எடுத்துச் சென்று ராணாகட் ரயில் நிலையம் அருகே நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஏழைகளை எழுப்பி அவர்களுக்குப் பகிர்ந்தளித்த பெண்ணின் படத்தைப் புகைப்படக்காரர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
உணவை வீணாக்காமல், தேவைப்படுவோருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்கிற அந்தப் பெண்ணின் நல்லெண்ணத்தையும், அவரின் செயலையும் பலரும் பாராட்டியுள்ளனர்.