டாட்டா, ஹோண்டா, ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் அடுத்த மாதத்தில் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்துவது பற்றிப் பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
உருக்கு அலுமினியம், செம்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வால் வாகனங்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.
இதனால் அடுத்த மாதத்தில் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக மாருதி சுசுகி ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஜனவரி முதல் வாகனங்களின் விலையை 2 விழுக்காடு உயர்த்துவதாக ஆடி நிறுவனமும், 3 விழுக்காடு உயர்த்துவதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளன.
இந்நிலையில் டாட்டா, ஹோண்டா, ரெனால்ட் நிறுவனங்களும் வாகனங்களின் விலையை உயர்த்தத் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.