பயணிகள் கட்டணம், நடைமேடைச் சீட்டு ஆகியவற்றின் மூலம் ரயில்வேயின் வருவாய் உயர்ந்துள்ளது.
2019 - 2020 நிதியாண்டில் ரயில்வே துறை சாதனை அளவாக 50 ஆயிரத்து 669 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. 2020 - 2021 நிதியாண்டில் கொரோனா சூழலில் வருவாய் 15 ஆயிரத்து 248 கோடி ரூபாயாகக் குறைந்தது. நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான 6 மாதக் காலத்தில் மட்டும் 15 ஆயிரத்து 434 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
பயணிகள் கட்டணம், கொரோனா சூழலில் நடைமேடைச் சீட்டு பத்து ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது ஆகியவற்றால் வருவாய் உயர்ந்துள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 2026 - 2027 ஆண்டில் நிறைவேறும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.