முதல் மற்றும் இரண்டாவது கொரோனா அலையை விட இந்தியா தற்போது சிறந்த நிலையில் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய மரபியல் மற்றும் சமூகத்திற்கான டாடா இன்ஸ்டிடியூட் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா, கொரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாவது அலையில் இருந்ததை விட சுகாதார அமைப்பு மிகவும் வலுவான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் மக்கள் கவனக்குறைவாக இருப்பதன் மூலம் தொற்றினை மீண்டும் பரவச் செய்து விடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவின் வலிமையான கருவி என்று கூறிய ராகேஷ் மிஸ்ரா, முழுமையாக தடுப்பூசி போடுமாறு மக்களை வலியுறுத்தினார்.