ஜாவத் புயல் வலுவிழந்த நிலையில் ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று பிற்பகல் கரையைத் தொட்டு மேலும் வலுவிழந்து நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட கடலோர மாநிலங்கள் பாதிப்பில் இருந்து தப்பின. ஆனால் ஒடிசாவில் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனையொட்டி 16 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டோருக்காக பூரி நகரில் மாநில அரசு நிவாரண முகாம்களை அமைத்துள்ளது.