நேரடி வரிகள், மறைமுக வரிகள் வருவாய் முன்பு கணித்த அளவுக்கு இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒரு நாளேட்டின் சார்பில் நடத்தப்பட்ட தலைமைத்துவ மாநாட்டில் பேசிய அவர், உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகத் தெரிவித்தார்.
அமைப்புசாராப் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களை முறைப்படுத்தப் பெருந்தொற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்களும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். மத்திய அரசுக்கு வரி வருவாய் முன்னேற்றம் அடைந்துள்ளதால், மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
ஒமிக்ரான் தொற்று ஓர் அச்சுறுத்தல் இல்லை என்றும், அதே நேரத்தில் சவாலானது என்றும், உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி நிதி செலவிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.