மூலப் பொருள், கட்டுமானப் பொருளின் விலை உயர்வால் 2022ஆம் ஆண்டில் கார்கள், வீடுகளின் விலை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிலோவுக்கு 38 ரூபாயாக இருந்த உருக்கு விலை இந்த ஆண்டில் 77 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் பன்னாட்டுச் சந்தையில் கடந்த ஆண்டில் ஒரு டன்னுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயாக இருந்த அலுமினியம் விலை, இந்த ஆண்டில் இரண்டு இலட்சத்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால் ஜனவரியில் இருந்து கார்களின் விலையை உயர்த்துவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் 2 விழுக்காடும், ஆடி 3 விழுக்காடும் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. டாட்டா, மகிந்திரா, ஹுண்டாய் ஆகியனவும் விரைவில் விலை உயர்வை அறிவிக்க உள்ளன.
சிமென்ட், உருக்கு விலை உயர்வு, கட்டுமானத் தொழிலாளருக்கான கூலி உயர்வு ஆகியவற்றால் வீடுகள் விலையும் 10 முதல் 15 விழுக்காடு வரை உயரும் எனக் கட்டுமானத் தொழில் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.