மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரைக் கூட்டத்தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்துக்குப் போட்டியாகப் பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 உறுப்பினர்கள் இடைநீக்கத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே காந்தி சிலை முன் எதிர்க்கட்சியினர் நாள்தோறும் போராட்டம் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக இரு அவைகளிலும் நாள்தோறும் அமளியில் ஈடுபடுவதும், அதன்பின் புறக்கணித்து வெளிநடப்புச் செய்வதும் தொடர்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் போக்கைக் கண்டித்து இன்று காந்தி சிலை முன் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.