மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒமக்ரான் வைரஸ் மேலும் பலநாடுகளில் பரவுவதற்கான சாத்தியகூறுகள் உள்ளதால் இந்தியாவிலும் அடுத்த சில தினங்களில் அது பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமக்ரான் பாதிப்பு கடுமையாக இருந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை, அதிவேகத்தில் தடுப்பூசி போடப்படுவதாலும், டெல்டா வைரஸ் காரணமாக மக்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாலும் அதன் தீவிரம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், தடுப்பூசி திறன், செல்லுலார் இம்யூனிட்டி ஆகியவற்றால் தீவிர பாதிப்பை தவிர்க்கலாம் என அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.