பள்ளிகளை மூடும்படி டெல்லி அரசிடம் ஒருபோதும் கூறவில்லை என்றும், பள்ளிகள் திறப்புத் தொடர்பான நிலைப்பாட்டின் மாற்றத்துக்கான காரணங்களை மட்டுமே கேட்டதாகவும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பெரியவர்களான அரசு அலுவலர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி செய்துவிட்டு மாணவர்களை மட்டும் பள்ளிக்கு வரச்சொன்ன காரணம் என்ன என நீதிபதிகள் வினவினர். இதையடுத்து டிசம்பர் மூன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடப்படுவதாக டெல்லி அரசு அறிவித்தது.
இது குறித்து இன்று நாளிதழில் வெளியான செய்தியில், பள்ளிகளை மூடும்படி நீதிமன்றம் நெருக்குதல் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சில ஊடகங்கள் தங்களை வில்லன்களாகச் சித்தரித்துவிட்டதாக நீதிபதிகள் கூறினர்.