மாநிலங்களவையில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர், தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இன்றைய நாள் கூட்டத்தொடரிலும் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய எதிர்க்கட்சிகள், அந்த முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தினர்.