கர்நாடகாவில் உயிரிழந்ததாக கூறி அடக்கம் செய்து இறப்பு சான்றிதழ் பெறப்பட்ட முதியவர் 3 மாதங்கள் கழித்து உயிரோடு வந்து ஊர் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளார்.
தும்கூர் மாவட்டம் சிக்கமாலூரைச் சேர்ந்த நாகராஜப்பா என்ற அந்த முதியவர், பெங்களூருவில் செவிலியராகப் பணியாற்றி வரும் இளைய மகள் நேத்ரா என்பவரது வீட்டுக்கு 3 மாதங்களுக்கு முன் சென்றுள்ளார். குடிபோதையில் பெங்களூரு வீதிகளில் சுற்றி வந்த நாகராஜப்பா, திடீரென மாயமாகியுள்ளார்.
குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில், செண்ட் ஜான்ஸ் மருத்துவமனை அருகே அவரைப் போன்றே உருவம் கொண்ட சடலம் ஒன்று கிடந்துள்ளது. அது நாகராஜப்பாதான் என உறுதி செய்த அவரது மகள்கள், உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி, முறையாக அடக்கம் செய்து, இறப்புச் சான்றிதழும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், நாகராஜப்பா திடீரென ஊருக்குள் உயிரோடு வந்துள்ளார். அவரைப் பார்த்து ஊர்மக்கள் பீதியாகி தெறித்து ஓடியுள்ளனர். அவரிடம் விசாரித்தபோது, போதையில் வழிதவறி எங்கோ சென்று கூலி வேலை செய்து வந்ததாகக் கூறியுள்ளார்.