ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மகாராஷ்டிராவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆபத்தில் உள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் நாடுகளில் இருந்து வருவோர் 7 நாள் கட்டாய தனிமைபடுத்தலில் வைக்கப்படுவர்.
இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இரண்டாவது நாள், நான்காவது நாள், ஏழாவது நாள் என மூன்று முறை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை எடுக்கப்படும். மேற்குறிப்பிட்ட நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை எடுக்கப்படும்.
அதில் தொற்று இல்லை என உறுதியானாலும், 14நாட்கள் வீட்டு தனிமைபடுத்துதலில் வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.