மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி விமான நிலையங்களில் சோதனை நடத்தப்படுவதால் பயணிகள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆபத்தான நாடுகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள 14 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்திய விமானநிலையங்களில் கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக பயணிகள் பணம் கட்டி சோதனை செய்து, அதன் முடிவுக்காக கிட்டத்தட்ட 6 மணி நேரம் கூடுதலாக காத்திருக்க வேண்டியிருக்கும். விமான நிலையங்களில் மணிக்கு 400 முதல் 500 பேருக்கு சோதனை செய்ய முடியும் என்ற போதிலும், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.