புதுச்சேரி யூனியன் காரைக்காலில், தொடர் மழை காரணமாக பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
காரைக்கால் நகரில் உள்ள பாரதியார் வீதியில் மிகப்பழமையான கட்டிடம் வலுவிழந்து இடியும் தருவாயில் இருந்தது. இந்நிலையில், அக்கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் முன் பகுதி முழுவதும் திடீரென இடிந்து விழுந்தது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தி, பொக்லைன் இயந்திரம் மூலம் சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.