நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர், இக்கூட்டத்தொடர் மிக முக்கியமானது என்றும் எதிர்க்கட்சிகள் வீண் அமளிகளை தவிர்த்து, நாடாளுமன்ற மாண்பையும், கண்ணியத்தையும் காத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.