நாடாளுமன்றம் நோக்கி நாளை டிராக்டர் பேரணி செல்ல இருந்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார்.
விரைவில் பயிர்களுக்கான அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்க மத்திய அரசு புதிய குழுவை அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாளை நடைபெற இருந்த டிராக்டர் பேரணி ஒத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.