விவசாயிகள் உடனடியாக தங்கள் போராட்டத்தை கைவிட்டு, வீடு திரும்ப வேண்டும், என மத்திய வேளாண்துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமர் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களையும், வாபஸ் பெறுவதாக அறிவித்த பின்னரும், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது அர்த்தமில்லை, என்று குறிப்பிட்ட அவர், வைக்கோல் எரிப்பவர்கள் மீது, குற்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது, என்ற விவசாய அமைப்புகளின் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை, வாபஸ் பெறுவது மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே முடிவு செய்யும் என்றும், அவர் தெரிவித்தார். செலவில்லா வேளாண்மை மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக, பிரதமர் மோடி அறிவித்துள்ள குழுவில், விவசாயிகள் சங்கத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும், என்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர் தெரிவித்தார்.