டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச விமானப் போக்குவரத்து துவக்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் இன்னும் நீடிப்பதால், நாடுகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதற்கேற்றவாறு எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று அதிகமுள்ள 14 நாடுகளுக்கு தற்போதுள்ள ஏர் பபிள் ஏற்பாட்டில் மட்டுமே விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், புதிய மரபணு மாற்ற வைரசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இயல்பான விமானப் போக்குவரத்து நடத்தப்படமாட்டாது எனவும் கூறப்படுகிறது.
இயல்பான விமானப்போக்குவரத்து துவக்கப்பட்டாலும், விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்பதால் பயணக்கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.