இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு விகிதம், மக்களின் வாழ்க்கை தரம் உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களை கொண்டு நிதி ஆயோக் நடத்திய கணக்கெடுப்பில், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் ஆகியவை இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன