செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மும்பை தீவிரவாதத் தாக்குதலின் 13வது ஆண்டு நினைவுநாள்

Nov 26, 2021 03:51:12 PM

மும்பையில் 166 பேரைப் பலிகொண்ட கொடூரத் தாக்குதல் நடந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தீவிரவாதத்தின் கோரமுகத்தை நினைவுகூரும் ஒரு செய்தித் தொகுப்பு.

2008ம் ஆண்டு இதே நாள்.. வழக்கம்போல் பரபரப்போடும், சுறுசுறுப்போடும் இயங்கியது வர்த்தகத் தலைநகரான மும்பை... ஆனால், அங்கிருந்த யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் அப்படியொரு கொடூரம் அன்று இரவில் நிகழும் என்று!

மீனவர்களைப் போல இரு படகுகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், மும்பையின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து சென்றனர். இரவு 9.30 மணியளவில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு வந்த தீவிரவாதிகள் கசாப், இஸ்மாயில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 58 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். 104 பேர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அங்கிருந்து காமா மருத்துவமனை நோக்கி சென்ற தீவிரவாதிகளைத் தடுக்க முயன்ற, மும்பை காவல் அதிகாரிகளான ஹேமந்த் கார்கரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர் ஆகியோரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நடந்த சற்றுநேரத்தில், கொலாபா, நரிமண் பாயிண்ட், கேட்வே ஆஃப் இந்தியா என அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்தேறின. தாஜ் ஹோட்டலில் 31 பேரையும், ஓபராய் ஹோட்டலில் 30 பேரையும், மற்ற இடங்களில் 40 க்கும் மேற்பட்டோரையும் ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

எங்கே என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே கடும் உயிர்சேதத்தை விளைவித்துவிட்டனர் தீவிரவாதிகள்! தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்ததால், கமாண்டோ படையினர் சமயோஜிதமாக செயல்பட்டு தீவிரவாதிகளை வேட்டையாடி 400க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவித்தனர்.

கொலாபாவில் உள்ள யூத மையத்தில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க கமாண்டோ படை வீரர்கள் சாகசத்துடன் செயல்பட்டனர். ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றில் இறங்கிய அவர்கள் 2 தீவிரவாதிகளை வீழ்த்தி 9 பேரை மீட்டனர்.

மூன்றுநாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த தாக்குதல் 29ம் தேதி முடிவுக்கு வந்தது. 166 பேர் உயிரிழப்புக்கு காரணமான இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றாலும், தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக கஸாப் தெரிவித்தான்.

உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கஸாப்பை முன்வைத்து நீண்ட விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவனுக்கு கடந்த 2012ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

தீவிரவாதிகளை அன்றைய தினம் எதிர்கொண்ட கமாண்டோ படையினரும், போலீசாரும் நமது வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்... தன்னலம் கருதாது உயிர்த்தியாகம் செய்த அவர்களுக்கு இந்தநாளில் வீரவணக்கத்தை செலுத்துவோம்.. அவர்களின் தியாகத்தை மனதில் கொள்வோம்.

13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆறா வடுவாகவே இன்றும் உள்ளது. மும்பைபோலீசாருக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு, முப்படைக் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல்களை சமாளிப்பது குறித்து அனைத்து கடலோர மாநிலங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எது எப்படியோ, உலகின் எந்த மூலையிலும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் ஒருபோதும் நடைபெறக் கூடாது, எந்தவொரு உயிரும் தீவிரவாதத்திற்கு பலியாகக் கூடாது என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணமாக உள்ளது.


Advertisement
ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது - பிரதமர் மோடி
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து - 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..
ரயில் தண்டவாளத்தில் மாணவி தவறி விழுந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி
காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியா - கனடா இடையே வார்த்தை மோதல் அதிகரிப்பு
தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முவுர் கொலை..
காரைக்கால் அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை .!
புதுச்சேரி விடுதலைதினத்தையொடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை
வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்
அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..


Advertisement