ஜார்க்கண்ட் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் எல்லை காவல் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரையும் மேலும் 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் 5 பேரும் நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெரோஸ்புர் துணை ராணுவப் படையினர் ஆயுதக்கிடங்குக்கு பொறுப்பு வகிக்கும் வீரர் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மகாராஷ்ட்ரா பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட ஏராளமான ஆயுதங்களையும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.