கடந்த அக்டோபர் முதல் தலைமறைவாக இருந்த மும்பை முன்னாள் காவல் ஆணையாளர் பரம் பீர் சிங் இன்று கிரைம் பிராஞ்ச் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.
மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், போலீசாரை பயன்படுத்தி, பார் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் பறித்தார் என்று பரம் பீர் சிங் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் தேஷ்முக்கின் பதவி பறிக்கப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல் 200 நாட்களுக்கும் மேலாக பரம் பீர் சிங் தலைமறைவாக இருந்தார். அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்த நிலையில் சண்டிகரில் இருந்து மும்பை வந்த அவர் விசாரணையில் இணைந்து கொள்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.