மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைய உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
மொத்தம் உள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மம்தா தலைமையிலான அணிக்கு மாற உள்ளது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்மா கட்சித் தலைமையுடன் அதிருப்தி கொண்டிருப்பதாக கடந்த 2 மாதங்களாக வெளியான செய்திகளின் தொடர்ச்சியாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.