உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஜெவர் பகுதியில் அமைய உள்ள ஆசியாவின் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
மாநிலத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் கட்டப்படும் 10 வது விமான நிலையம் இது. மேலும் 7 புதிய விமான நிலையங்கள் அயோத்தி உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட உள்ளன. கடந்த 70 ஆண்டு காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் 2 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன என்றும் இப்போது 10 விமான நிலையங்களாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஒரு கோடிக்கு மேலான பயணிகளைக் கையாளக்கூடிய ஜெவர் விமான நிலைய கட்டுமானப்பணிகளில் சுமார் ஒருலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.