நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர நாளைக் குறிக்கும் வகையில் விடுதலையின் அமிர்த மகோத்ஸவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி, இணை அமைச்சர்கள் வி.முரளீதரன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் நிகழ்ச்சிகளை குறித்து விளக்கினர்.