நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இது ஒரு மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்த உள்ளது.
இதன் மூலம் நாட்டிலேயே 5 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் திகழும். 30 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் பத்தாயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த விமான நிலையத்தின் முதற்கட்ட கட்டுமானம் அமைக்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் ஒருகோடியே 20 லட்சம் பயணிகள் இதனைப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். இதே போல் அயோத்தியிலும் சர்வதேச விமானநிலையம் அமைய உள்ளது.அண்மையில் குஷிநகர் பகுதியில் சர்வதேச விமானநிலையம் ஒன்றும் திறந்துவைக்கப்பட்டது.