கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. விடாமல் பெய்த கனமழையால் ஜவகர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு மையத்தில் வெள்ள நீர் புகுந்து ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் நீரில் மூழ்கின.
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகளின் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கின. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் சிக்கிக் கொண்ட மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.