பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டுக்குள் 2கோடியே 95 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு லட்சத்து 47ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.