இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான விருதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிப் பாராட்டினார். இரண்டாமிடத்தில் குஜராத்தின் சூரத் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தூய்மையான மாநிலத்துக்கான விருது சத்தீஸ்கருக்கு வழங்கப்பட்டது. தூய்மையான நகருக்கான விருதைத் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாகப் பெற்றதை இந்தூர் நகரில் துப்புரவுப் பணியாளர்கள் நடனமாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.