விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பாதுகாப்பு அளிப்பது, விவசாயிகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பளிக்கும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார். லக்கிம்பூரில் விவசாயிகளின் மீது காரை மோதிக்கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.