இந்திய விமானப்படையும் பிரான்ஸ் விமானப்படையும் இணைந்து மேற்கு கடல் பகுதியில், கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன. "டெசர்ட் நைட் 2" என்ற பெயரில் மேற்கு கடல் பகுதியில் இப்பயிற்சி நடைபறுவதாக, இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு நட்புறவு அடிப்படையில், இந்த பயிற்சி நடைபெறுகிறது. இதில், பிரான்ஸ் நாட்டின் மிராஜ் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றன. இந்தியா விமானப்படை சார்பில், ஜாக்குவார் மற்றும் சுகோய் போர் விமானங்கள் பங்கேற்றன.
ஏற்கனவே, இருநாட்டு ராணுவ கூட்டுப்பயிற்சி, பிரான்ஸில் உள்ள ஃபெரஜுஸ் பகுதியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.