போதிய தகவல் தொடர்பு வசதி இல்லாத கிராமப்புற பகுதிகளில், தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த, 6,466 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.
இத்தகவலை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 7,287 கிராமங்களில், 4-ஜி சேவை வழங்கப்படும் என்றும், இது இன்னும் 2 ஆண்டு காலத்திற்குள் செயல்படுத்தப்படும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல கிராமங்களில், சூரிய மின்சக்தி மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு, தகவல் தொடர்பு வசதி, தற்சார்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றுடன், அரசின் மின்னணு நிர்வாகம், பேரிடர் நிர்வாகம் போன்றவை மூலமும் பயன் கிடைக்கும்.