கோவில்களில் பூஜைகள் ,சடங்குகள் நடத்துவதில் உயர் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகளை மட்டும் நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கோவிலில் சாமி முன்னால் எப்படி தேங்காய் உடைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்துக்கு கட்டளையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
திருப்பதி திருமலை தேவஸ்தானம் பக்தர்களுக்கு தினசரி சடங்குகளை செய்ய விடாமல் தடுப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு இது விளம்பரத்துக்காக தாக்கல் செய்த மனுவாக கருதுவதாகவும் தெரிவித்தது.